தமிழ்நாட்டில் 1 லட்சம் கொரோனா துரித சோதனைகள் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் மேலும் 1 லட்சம் பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்வதற்கான துரித சோதனைப் பெட்டிகள் வர வழைக்கப்படுகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர், ஒரு லட்சம் துரித சோதனைப் பெட்டிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை ஏப்ரல் 10ம் தேதிக்குள் வந்து விடும் என்று தெரிவித்துள்ளார். ரத்த மாதிரியிலிருந்து எடுக்கப்படும் இந்த சோதனைகளின் முடிவுகள் விரைவாகத் தெரிந்து விடும். தற்போது மூக்கின் வழியாக நடத்தப்படும் சோதனைக்கான முடிவுகள்
 

தமிழ்நாட்டில் 1 லட்சம் கொரோனா துரித சோதனைகள் – அமைச்சர் விஜயபாஸ்கர்!மிழ்நாட்டில் மேலும் 1 லட்சம் பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்வதற்கான துரித சோதனைப் பெட்டிகள் வர வழைக்கப்படுகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைச்சர், ஒரு லட்சம் துரித சோதனைப் பெட்டிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை ஏப்ரல் 10ம் தேதிக்குள் வந்து விடும் என்று தெரிவித்துள்ளார். ரத்த மாதிரியிலிருந்து எடுக்கப்படும் இந்த சோதனைகளின் முடிவுகள் விரைவாகத் தெரிந்து விடும். தற்போது மூக்கின் வழியாக நடத்தப்படும் சோதனைக்கான முடிவுகள் தெரிவதற்கு 5 மணி நேரம் ஆகிறது என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள மொத்த 170 கொரோனா சோதனை மையங்களில் 17 தமிழ்நாட்டில் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், மேலும் 10 சோதனை மையங்கள் இந்த வாரத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார நிறுவனம், ஜப்பான் இண்டர்னேஷனல் கூட்டுறவு அமைப்பு, பல்வேறு தொற்றுநோய் நிபுணர்கள் என ஆலோசனைகள் மேற்கொண்டு, துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 70% சதவீத மக்கள் ஏதாவது ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்கள், காப்பீடு இல்லாதவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web