சாத்தான்குளம் அப்பாவிகளின் மரணத்தை கேலி செய்வதா? துக்ளக் குருமூர்த்திக்கு உதயநிதி ஸ்டாலின் சுளீர் கேள்வி!!

துக்ளக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் சாத்தான்குளம் வியாபாரிகள் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேலிச்சித்திரமாக போடப்பட்டுள்ளதை உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார். துக்ளக் அட்டைப்படத்தில் ஒரு போலீஸ்காரர் மற்றொரு போலீஸ்காரரிடம் “என்னய்யா, மூணாவது தெருவில் கொரோனாவை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கனும்னுன்னு மக்கள் போராட்டம் நடத்தினாங்களாமே? எப்படி அவங்களை கலைச்சே,” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் போலீஸ்காரர்,“ விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போவேன்னு சொன்னேன். கொரோனாவிலேயே செத்துக்குறோம்னு அத்தனை பேரும் கலைஞ்சு ஓடிட்டாங்க,”
 

சாத்தான்குளம் அப்பாவிகளின் மரணத்தை கேலி செய்வதா? துக்ளக் குருமூர்த்திக்கு உதயநிதி ஸ்டாலின் சுளீர் கேள்வி!!துக்ளக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் சாத்தான்குளம் வியாபாரிகள் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேலிச்சித்திரமாக போடப்பட்டுள்ளதை உதயநிதி ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

துக்ளக் அட்டைப்படத்தில் ஒரு போலீஸ்காரர் மற்றொரு போலீஸ்காரரிடம்  “என்னய்யா, மூணாவது தெருவில் கொரோனாவை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கனும்னுன்னு மக்கள் போராட்டம் நடத்தினாங்களாமே? எப்படி அவங்களை கலைச்சே,” என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு பதிலளிக்கும் போலீஸ்காரர்,“ விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போவேன்னு சொன்னேன். கொரோனாவிலேயே செத்துக்குறோம்னு அத்தனை பேரும் கலைஞ்சு ஓடிட்டாங்க,” என்று பதில் சொல்கிறார்.

இந்த கேலிச்சித்திரத்தை கண்டித்துள்ள உதயநிதி,  “அப்பாவி இருவரை அடித்தே கொன்றுள்ளனர். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காடுகிறது. மக்கள் தன்னெழுச்சியாகப் போராடுகிறார்கள். இச்சூழலிலும் இக்கொலையை நகைச்சுவையாக அட்டைப்படமாக்க முடிகிறது எனில் உங்களின் தமிழர் விரோத, துரோகத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இது தான் பத்திரிக்கை தர்மமா,” என்று கூறி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை டேக் செய்துள்ளார்

மற்றொரு ட்வீட்டில், “‘நீயெல்லாம் ஆம்பளையா’ என்று கேட்டபோதே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எதிர்த்து இருந்தால் இன்று ஒட்டு மொத்த தமிழக மக்களையும் பார்த்து குருமூர்த்தி இப்படி கேலி பேசுவாரா?. உங்களின் கமிஷன், கலெக்‌ஷனுக்காக  ’ஆடிட்டரே, இந்த அரசு உங்கள் அடிமை’ என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால் வந்த வினை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டேக் செய்து கேட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு  சுடச்சுட பதிலடி கொடுத்து, தன்னுடைய அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் பிஸியாக உள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது தான் கலைஞர் கருணாநிதியின் அரசியல் பாணி என்பதும் குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

From around the web