கமல் – ஷங்கரின் இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! #Indian2

சென்னை: கமல் ஹாசன், ஷங்கா் கூட்டணியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தியன் படம் வெளியானது. ஊழல், லஞ்சம் ஆகிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வெள்ளி விழா கொண்டாடி, விருதுகளையும் அள்ளியது அந்தப் படம். அதன் பின்னர் கமல் ஹாசன், ஷங்கா் கூட்டணியில் ரோபோ என்ற படம் உருவாக இருந்து, பின்னர் கைவிடப்பட்டது. அதன் பிறகு எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும்
 

கமல் – ஷங்கரின் இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! #Indian2
சென்னை: கமல் ஹாசன், ஷங்கா் கூட்டணியில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தியன் படம் வெளியானது. ஊழல், லஞ்சம் ஆகிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வெள்ளி விழா கொண்டாடி, விருதுகளையும் அள்ளியது அந்தப் படம்.

அதன் பின்னர் கமல் ஹாசன், ஷங்கா் கூட்டணியில் ரோபோ என்ற படம் உருவாக இருந்து, பின்னர் கைவிடப்பட்டது. அதன் பிறகு எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படத்திற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கமல் ஹாசனின் பிறந்த நாளில் வெளியிட்டது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கான பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பா்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல் ஹாசன் வா்மக்கலை முத்திரையுடன் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்தியன் முதல் பாகத்தில் கமல்ஹாசன் வா்மக் கலையை கையாண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ரவி வர்மன், கலை இயக்குநராக முத்துராஜ், பாடல்களை தாமரை, விவேக் ஆகியோர் எழுதுகின்றனர்.

மேலும் வருகின்ற 18ந் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web