அந்த லோக்பால் என்னாச்சு…? ஊழல் விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம்…! – காங்கிரஸ் கடும் தாக்கு!

ுக்கான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராட்டம் நடத்திய பாஜக, ஆட்சியில் அமர்ந்து மூன்றாண்டுகளாகியும் அதைக் கிடப்பில் போட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்க லோக்பால் என்ற புதிய அமைப்பு உருவாக்குவதற்காக லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும். அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டமும், அதற்கு உலக அளவில் இந்தியர்கள் ஆதரவு கொடுத்து அப்போதைய
 

அந்த லோக்பால் என்னாச்சு…? ஊழல் விவகாரத்தில் பாஜகவின் இரட்டை வேடம்…! – காங்கிரஸ் கடும் தாக்கு!ுக்கான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராட்டம் நடத்திய பாஜக, ஆட்சியில் அமர்ந்து மூன்றாண்டுகளாகியும் அதைக் கிடப்பில் போட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்க லோக்பால் என்ற புதிய அமைப்பு உருவாக்குவதற்காக லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டமும், அதற்கு உலக அளவில் இந்தியர்கள் ஆதரவு கொடுத்து அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததும் இந்த லோக்பால் சட்டம் நிறைவேற்றுவதற்குத் தான்.

பாஜகவினரும் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் தொடர் போராட்டங்கள் நடத்தி அரசை முடக்கினர்.

லோக்பால் சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலை 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியே மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெற்று விட்டது.

அது வேற வாய்..

எதற்காக போராட்டம் நடத்தினார்களோ அதை ஆட்சிக்கு வந்ததும் மறந்து விட்டார்கள் பாஜக என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர்.

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் மோடியின் தலைமையிலான பாஜக அரசு, லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்க வில்லை என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

Common Cause என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைப்பின் சார்பில் ஆஜராகும் முன்னாள் சட்ட அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷண், வேண்டுமென்றே மத்திய அரசு தாமதப்படுத்துவதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மீது பாராளுமன்றத்தில் உரிமைப் பிரச்சனை எழுப்பியிருந்தார்.

லோக்பால் சட்ட விவகாரம் குறித்து அவையில் ஜேட்லி தவறான தகவல் தெரிவித்து திசை திருப்பி விட்டார் என்று அந்த உரிமைப் பிரச்சனை எழுப்பப் பட்டது.

சட்ட திருத்தத்திற்கான மசோதா குறித்து பாராளுமன்ற நிலைக்குழு யோசித்து வருவதாக ஜேட்லி முன்னதாக கூறியிருந்தார்.

லோக்பால் நிறைவேற்றக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே கடந்த மூன்றாண்டுகளாக வாய்மூடி மவுனியாக இருப்பதுவும் கேள்விகளை எழுப்புகிறது.

அன்னா ஹசாரேவை நம்பி உலகம் முழுவதும் தமிழர்கள் உட்பட , ஃபேஸ்புக் ப்ரொபைல் படத்தை மாற்றியும், குல்லா அணிந்தும் போராட்டங்கள் நடத்தியவர்களும், எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பதுவும் ஆச்சரியமாகத் தான் உள்ளது.

English Summary:

Congress leader Anand Sharma condemning BJP government for not taking action over three years, implementing Lokpal act. Earlier Supreme Court also condemned the central government for no actions. Common Cause, an NGO filed a suit in Supreme Court for expediting the process of implementing Lokpal act. Former Law Minister and senior advocate Shanti Bhushan is appearing for the NGO.

From around the web