சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி!

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் வேளையில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்பை எதிர்த்து முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கருப்பின பெண்ணான கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி பதவிக்கு ஜோ பிடன் அறிவித்துள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு வயது 55. இவரது தந்தை
 

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டி!லகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் வேளையில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்பை எதிர்த்து முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கருப்பின பெண்ணான கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி பதவிக்கு ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு வயது 55. இவரது தந்தை ஆப்பிரிக்காவின் ஜமைக்காவைச் சேர்ந்தவர். தாய் சியாமளா கோபாலன் ஹாரிஸ் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிஸ் தற்சமயம் கலிபோர்னியா மாகாணத்தின் செனட் சபை எம்.பி.யாக இருக்கிறார்.அமெரிக்க செனட் சபைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை உடையவர் கமலா ஹாரிஸ்.

இதனையடுத்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய அமெரிக்கர்கள் கமலா ஹாரிசுக்கு தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

A1TamilNews.com

From around the web