கமலா ஹாரிஸ் வெற்றிக்காக உழைப்போம்! சரித்திரம் படைப்போம்! அமெரிக்க அதிமுக சார்பில் வாழ்த்து!!

அமெரிக்க தேசத்தை வழி நடத்தி செல்லக்கூடிய மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஜனாதிபதிக்கான பதவிக்கு, தமிழ் வம்சாவளியை சேர்ந்த திருமதி. கமலா ஹாரிஸ் அவர்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது உலக தமிழர்களுக்கான பெருமையான தருணங்களில் ஒன்று. இது உலக அரங்கில் தமிழர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் கோரப் பிடியில் மனித சமூகம் சிக்கி தவிக்கும் சிக்கலான நேரத்தில், திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் அறிவிப்பு என்பது உலகத் தமிழர்களின்
 

கமலா ஹாரிஸ் வெற்றிக்காக உழைப்போம்! சரித்திரம் படைப்போம்! அமெரிக்க அதிமுக சார்பில் வாழ்த்து!!அமெரிக்க தேசத்தை வழி நடத்தி செல்லக்கூடிய மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை ஜனாதிபதிக்கான பதவிக்கு, தமிழ் வம்சாவளியை சேர்ந்த திருமதி. கமலா ஹாரிஸ் அவர்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது உலக தமிழர்களுக்கான பெருமையான தருணங்களில் ஒன்று. இது உலக அரங்கில் தமிழர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனாவின் கோரப் பிடியில் மனித சமூகம் சிக்கி தவிக்கும் சிக்கலான நேரத்தில், திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் அறிவிப்பு என்பது உலகத் தமிழர்களின் மத்தியில் மகிழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.  தமிழர்களின் மீது மிகப்பெரிய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியலின் அனைத்து படிநிலைகளையும் கடந்து, ஒரு சாதனையாளராக சர்வதேச அரங்கில் உயர்ந்து நிற்கிறார் என்றால் அமெரிக்க மக்களின் மனங்களை பேதமின்றி வென்றடுத்துள்ளார் என்று தான் அர்த்தம்.

திருமதி. கமலா ஹாரிஸ் அவர்கள், கடந்த காலங்களில் கலிபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகவும், செனட்டராகவும் தேர்தலில் போட்டியிட்ட போது, அவரது வெற்றிக்காக உழைத்தது நீங்காத நினைவுகள். அப்படி அவரை சந்திக்க நேர்ந்த சில அரிய வாய்ப்புகளில், நம் மண் மனம் நிறைந்த “வணக்கம்” என்று தமிழில் வரவேற்றதைக்  கேட்டு வியந்துள்ளேன். ஓக்லாண்ட் நகரத்தில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டத்தில், தன் மூதாதையர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டு பேசியது, அவரின் ஆழ்மனதில் தமிழ் வேர் ஊருடுவி இருப்பதை காட்டுகிறது.

உலக தமிழர்களின் நலனில் நம் தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களும், துணை முதல்வர் திரு.ஒ.பன்னீர்செல்வம் அவர்களும் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ளனர். ஒவ்வொரு தமிழரின் வெற்றியையும்  தங்களின் வெற்றியாக கருதி பெருமிதம் கொள்ளும் மாண்பு படைத்தவர்கள். ஒருமுறை அரசு பயணமாக திருமதி.ஹிலாரி கிளிண்டன் அவர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது, புரட்சி தலைவி அம்மா அவர்களை சந்தித்து நட்பு பாராட்டியது குறிப்பிட தகுந்தது. இப்படிப்பட்ட உயர்ந்த பதவிகளில் தமிழர்கள் அமரும் போது, நிச்சயமாக தமிழகத்திற்கு நன்மை பயக்கும்.

அதனடிப்படையில், தமிழ் வம்சாவளியை சேர்ந்த திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களை, நிறைந்த மனதோடு, அமெரிக்காவில் வாழக்கூடிய அனைத்துத் தமிழர்கள் சார்பாகவும், அமெரிக்கா அதிமுக சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிடைப்பதற்கு  அரிய வாய்ப்பாக இதனை கருதி அனைத்து தமிழர்களும் ஒன்று பட்டு, திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் வெற்றிக்கு உழைத்திட வேண்டுகிறேன்.  நாளைய சரித்திரம் நம் பெயர் சொல்லட்டும்.   

– அபுகான், அமெரிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர், கலிஃபோர்னியா

A1TamilNews.com

From around the web