உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற ரஷ்யாவிற்கு குவியும் ஆர்டர்கள்!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தவும், அதற்கான தடுப்பு மருந்தை கண்டறியவும் உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான ‘ஸ்பூட்னிக் 5’ தடுப்பூசியை ரஷ்யா பரிசோதனை செய்து அதற்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்ய அதிபர் புதினின் மகள் போட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் சந்தைப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் போடப்படாமல் விருப்பமுள்ளவர்கள் மட்டும் தாமாகவே முன்வந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த
 

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைப் பெற ரஷ்யாவிற்கு குவியும் ஆர்டர்கள்!சீனாவில் தொடங்கி உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தவும், அதற்கான தடுப்பு மருந்தை கண்டறியவும் உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான ‘ஸ்பூட்னிக் 5’ தடுப்பூசியை ரஷ்யா பரிசோதனை செய்து அதற்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்ய அதிபர் புதினின் மகள் போட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில் சந்தைப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் போடப்படாமல் விருப்பமுள்ளவர்கள் மட்டும் தாமாகவே முன்வந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியைப் போடுபவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணிப்பதற்காக புதிய செயலி ஒன்றையும் ரஷ்ய சுகாதார அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இதனையடுத்து உலகின் மற்ற நாடுகளில் இருந்து இதுவரை இந்த தடுப்பூசிக்கு 100 கோடி ஆர்டர் வந்துள்ளதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web