அதிர்ச்சி! அமெரிக்காவில் 97 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா!!

அமெரிக்காவில் ஜூலை மாத இறுதி முதல் பள்ளிகள் தொடங்குவது வழக்கம். அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாளில் தொடங்காமல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் தொடங்கும். சில மாநிலங்களில் செப்டம்பர் மாதம் தான் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் ஆரம்பமாகும். கொரோனா பரவலால் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்காவிட்டால் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட மாட்டாது என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்து
 

அதிர்ச்சி! அமெரிக்காவில் 97 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா!!அமெரிக்காவில் ஜூலை மாத இறுதி முதல் பள்ளிகள் தொடங்குவது வழக்கம். அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாளில் தொடங்காமல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் தொடங்கும். சில மாநிலங்களில் செப்டம்பர் மாதம் தான் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் ஆரம்பமாகும்.

கொரோனா பரவலால் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்காவிட்டால் மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட மாட்டாது என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்து இருந்தார். மேலும், குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் தொடங்கப்பட்டு மாணவர்கள் வரத்தொடங்கினர். இரண்டு வாரங்களில் 97 ஆயிரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க குழந்தைகள் மருத்துவர்கள் மருத்துவமனைகள் அகடெமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.ஷான் ஓ லேரி, குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதால் வீட்டில் உள்ள பெற்றோர்கள் உள்பட மற்றவர்களுக்கும் பரவும் என்று தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் இது வரையிலும் 3 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று புதிய அறிக்கை கூறுகிறது. இதன் படி ஃப்ளோரிடா, ஜார்ஜியா, மிசோரி, ஓக்லஹோமா, மாண்டானா, அலாஸ்கா உள்ளிட்ட  தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பல மாநிலங்களில் ஆன்லைன் மூலம் பள்ளி வகுப்புகள் தொடங்கியுள்ளது. மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப ஆன்லைன் அல்லது நேரிடை வகுப்புகள் மூலமாகவும் பாடங்கள் நடத்தப்படுகிறது. 

இந்தியாவில் பள்ளிகளைத் திறந்தால் கொரோனா பரவல்  கட்டுகடங்காமல் சென்றுவிடும் என்ற அச்சத்தை தெரியப்படுத்தும் விதமாக, அமெரிக்க மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதிப் படுத்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web