முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா? தமிழருவி மணியன் சொல்வதென்ன?

கொரோனா காலத்தில், மனைவியின் உடல்நலம் கருதி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அடைபட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசியலில் மூத்த தலைவர் தமிழருவி மணியன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். ரஜினி அரசியல் உள்பட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியுள்ளதாவது, “ரஜினி சார் கட்சியை தொடங்கும்வரை நான் அமைதியாகத்தான் இருப்பேன். அவர், கட்சி ஆரம்பிக்கும்போது பேசுவேன். அதுவரை, வாயையேத் திறக்கமாட்டேன். ஏனென்றால், அவரை முழுமையாக ஆதரிக்கும் நிலையில் இருக்கிறேன். ரஜினி சார் கட்சி தொடங்கியதும்
 

முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளரா? தமிழருவி மணியன் சொல்வதென்ன?கொரோனா காலத்தில், மனைவியின் உடல்நலம் கருதி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அடைபட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசியலில் மூத்த தலைவர் தமிழருவி மணியன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். ரஜினி அரசியல் உள்பட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியுள்ளதாவது,

“ரஜினி சார் கட்சியை தொடங்கும்வரை நான் அமைதியாகத்தான் இருப்பேன். அவர், கட்சி ஆரம்பிக்கும்போது பேசுவேன். அதுவரை,  வாயையேத் திறக்கமாட்டேன். ஏனென்றால், அவரை முழுமையாக ஆதரிக்கும் நிலையில் இருக்கிறேன். ரஜினி சார் கட்சி தொடங்கியதும் எந்தவொரு பிரச்சனையைப் பற்றி பேசுவதற்குமுன், அவரிடம் விவாதித்துவிட்டுப் பேசுவேன். அதன்பிறகு, அவருடைய கருத்தும் என் கருத்தும் சேர்ந்து ஒன்றாக வரும்.

அதுவரை, குருவிக்கூடு அடைந்தமாதிரி கொரோனா சூழலால் வீடு அடைந்துக்கிடக்கிறேன். ரஜினி சாரை நான்கு மாதமாக, நான் நேரில் பார்க்கவே இல்லை. மற்றபடி வீட்டில் அமைதி காத்தாலும், தேசிய கல்விக்கொள்கையிலிருந்து அனைத்து பிரச்சனைகளையும் தொடர்ச்சியாக பார்த்து ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். எப்போதும் அப்டேட்டாகத்தான்  இருப்பேன்.  எனக்கென்று  தனிக்கருத்து உண்டு.  இந்த, 50 வருடம் அப்படித்தான் அரசியல் வாழ்க்கை நடத்திகொண்டிருக்கிறேன்.

நான்கு மாத காலமாக ரஜினி சாரை பார்க்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேமாதிரி உண்மை நானும் அவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம் என்பதும்.  ஐந்து நாட்களுக்கு முன்புகூட அவரும் நானும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம். அடிக்கடி அவரும் தொடர்புகொள்வார். நானும் தொடர்புகொள்வேன். ஆனால், எதையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ரஜினி கட்டாயம் வருவார். நிச்சயம் களத்தில் இருப்பார்; அடுத்த ஆட்சி மாற்றம் அவரால்தான் உருவாகும். அவர்தான், முதல்வராக வந்து உட்காருவார்,” என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்..

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைதான் முதல்வர் வேட்பாளர் என்கிறார்களே என்ற கேள்விக்கு அதுகுறித்தெல்லாம் இப்போதைக்கு பேசவேண்டாம் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

அண்ணாமலை பாஜகவில் அதிகாரப்பூர்வமாக சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தமிழருவி மணியனின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

A1TamilNews.com

From around the web