இதை விட்டு விட்டால் தமிழும் வாழும்! தமிழ்நாடும் வாழும்!!

எப்போதும் உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிலேயே பணிபுரிவதால், ஆங்கிலேமே துணை, ஆனால் அவ்வப்போது இந்திய வர்த்தகத்தின் பக்கமும் பணி வரும்போது, ஐடி கம்பெனியில் இருந்தாலும் வம்படியாய் அவர்கள் நடுநடுவே இந்திதான் பேசுவார்கள். ஆங்கில மொழியை இந்திக்கலப்பில்லாமல் பேச அவர்களில் பெரும்பாலானோர்க்கு தடுமாற்றம்தான், இதற்கிடையே ராஜாஸ்தானில் கம்பெனியோடு தொடர்புடைய இந்திய வர்த்தகர்களின் சந்திப்பிற்காக சென்றபோது, சென்னையில் வந்த இரண்டு வர்த்தகர்களோடு பேசிக்கொண்டிருக்க, டெல்லியில் இருந்து வந்த சக ஊழியர் தீவிர இந்திப்பற்றால் எங்களுடன் இந்தியிலேயே உரையாடலை ஆரம்பிக்க,
 

இதை விட்டு விட்டால் தமிழும் வாழும்! தமிழ்நாடும் வாழும்!!எப்போதும் உலக நாடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களிலேயே பணிபுரிவதால், ஆங்கிலேமே துணை, ஆனால் அவ்வப்போது இந்திய வர்த்தகத்தின் பக்கமும் பணி வரும்போது, ஐடி கம்பெனியில் இருந்தாலும் வம்படியாய் அவர்கள் நடுநடுவே இந்திதான் பேசுவார்கள்.

ஆங்கில மொழியை இந்திக்கலப்பில்லாமல் பேச அவர்களில் பெரும்பாலானோர்க்கு தடுமாற்றம்தான், இதற்கிடையே ராஜாஸ்தானில் கம்பெனியோடு தொடர்புடைய இந்திய வர்த்தகர்களின் சந்திப்பிற்காக சென்றபோது, சென்னையில் வந்த இரண்டு வர்த்தகர்களோடு பேசிக்கொண்டிருக்க, டெல்லியில் இருந்து வந்த சக ஊழியர் தீவிர இந்திப்பற்றால் எங்களுடன் இந்தியிலேயே உரையாடலை ஆரம்பிக்க, அடுத்த இருவரும் இந்திக்கு தாவ, நான் தூய தமிழில் டெல்லிவாசியுடன் உரையாட ஆரம்பித்தேன்.

“ஏம்மா இப்படி, என்ன சொல்றே?” என இந்தியில் கேட்க, “ஏன்ன்யா இப்படி நீ என்ன சொல்றே?” என அதையே நான் தமிழில் கேட்க, “ஒகே ஒகே லெட்ஸ் டாக் இன் இங்கிலீஷ்” என்று டெல்லி நண்பர் வழிக்கு வந்தார்!

டெல்லி சென்ற போது நான் ஆங்கிலம் தெரியாத மக்களிடம் இந்தியில் பேசினேன். நீ ஏன் தமிழ் படிக்கவில்லை என்றோ தமிழில் பேச வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அதே அவர்கள் தமிழகத்திற்கு வரும்போது அலுவலகத்தில் நான் ஆங்கிலத்தில் தான் பேசுவேன், அவர்களுக்காக மெனக்கெட்டு இந்தியில் பேசுவதில்லை.

இந்திக்கு எத்தனை தரம் அவர்கள் மாறினாலும், சாரி எனக்கு இந்தித்தெரியாது, எனக்காக உங்களால் தமிழில் பேசமுடியும் என்றால் நானும் உங்களுக்காக இந்தியில் உங்கள் மாநிலத்தில் பேசுகிறேன், இப்போது அது முடியாதென்றால் ஆங்கிலத்திலேயே தொடர்வோம், அவ்வளவுதான்!

தமிழர்கள் இந்தக் குனிந்து வளைந்து குழையும் ஜி ஜி அச்சா ஜி என்ற பிச்சைக்காரத்தனத்தை விட்டுவிட்டால் தமிழும் வாழும் தமிழ்நாடும் வாழும்!!!

– அமுதா

From around the web