சித்ரா பௌர்ணமி..! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சித்திரை நட்சத்திரமும் கூடி வரும் நாளே சித்ரா பௌர்ணமி என அழைக்கப் படுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் வருவதால் மற்ற பௌர்ணமிகளை விட சித்ரா பௌர்ணமி சிறப்பு பெறுகிறது. சித்ரா பெளர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது. 64 சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் மீனாக்ஷி அம்மன் சந்நிதியில் தான் இந்திரன் தோஷம்
 

சித்ரா பௌர்ணமி..! என்ன ஸ்பெஷல் தெரியுமா?சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சித்திரை நட்சத்திரமும் கூடி வரும் நாளே சித்ரா பௌர்ணமி என அழைக்கப் படுகின்றது.

மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் வருவதால் மற்ற பௌர்ணமிகளை விட சித்ரா பௌர்ணமி சிறப்பு பெறுகிறது.

சித்ரா பெளர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
64 சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் மீனாக்ஷி அம்மன் சந்நிதியில் தான் இந்திரன் தோஷம் நீங்கப்பெற்றான். அதனால் ஆலயம் அமைத்தான்.

ஆலயம் அமைத்த தினமான சித்ரா பௌர்ணமி அன்று இந்திரனே நேரில் வந்து வழிபடுவதாக ஐதீகம். உலகின் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி கொண்டாடப்பட்டாலும் மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது.

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்த பின்னர் மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை தர புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவ பெருமான்.

இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் சித்திரத்தை வரைந்திருந்தார். அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார் சிவபெருமான். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். சித்திரத்திற்கு உயிர் கொடுத்த நாளே சித்ரா பௌர்ணமி.

சிவபெருமானின் அரவணைப்பில் இருந்தபடியே உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுத்துக் கொண்டிருக்கிறார்.
தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் அகலிகையின் சாபத்தால் குழந்தைகள் பிறக்கவில்லை.

இந்தக் குறையைத் தீர்க்க, தம்பதியராக சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்.இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைத்தார்.

பிறக்கும்போதே கையில் ஏடும், எழுத்தாணியும் இருந்தது. சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என பெயர் பெற்றார்.

மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என யமனுக்கு யோசனை சொல்லும் கௌரவத்தையும் சிவபெருமான் சித்திர குப்தனுக்கு கொடுத்தார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த சித்திர புத்திரனை சித்ரா பௌர்ணமி நாளில் விரதமிருந்து வணங்குபவர்களின் பாவக்கணக்கை சரி செய்து விடுவார் என்பது ஆன்மீக அன்பர்களின் கருத்து.

A1TamilNews.com

From around the web