திருத்தணியில் எளிமையாக நடத்தப்பட்ட ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்களை பக்தர்கள் தரிசனமின்றி எளிமையாக நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் படி நேற்று ஆடிக்கிருத்திகை விழா தமிழகத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5வது படை வீடான் திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகையில் தெப்பத் திருவிழா ஆகியவை வெகு விமரிசையாக
 

திருத்தணியில் எளிமையாக நடத்தப்பட்ட ஆடிகிருத்திகை தெப்பத் திருவிழா!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாக்களை பக்தர்கள் தரிசனமின்றி எளிமையாக நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் படி நேற்று ஆடிக்கிருத்திகை விழா தமிழகத்தின் பல்வேறு முருகன் கோவில்களில் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

அந்த வரிசையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5வது படை வீடான் திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகையில் தெப்பத் திருவிழா ஆகியவை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஒவ்வொரு வருடமும் இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக் கான பக்தர்கள் திருத்தணிக்கு வருவர்.

தற்போதைய காலகட்டத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நேற்று மிக எளிமையாக தெப்பத் திருவிழா நடத்தப்பட்டது. மலைக் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் சிலர் கோவில் படிக்கட்டுகள் வரை நடந்து சென்று தேங்காய் உடைத்து அங்கிருந்தே முருகப் பெருமானை பிரார்த்தித்துக் கொண்டனர்.

A1TamilNews.com

From around the web