நாளை (ஜூன்21) சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டியவை,செய்யக் கூடாதவை என்னென்ன?

இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் நாளை காலை 10.16 மணி முதல் பகல்1.32 மணி வரை நீடிக்கிறது. நாளை நடைபெற இருக்கும் இந்த சூரிய கிரகணம் முழு நெருப்பு வளையம் போன்று காணப்படும். மொத்த கிரகண நேரம் 3 மணி 14 நிமிடம் 24 விநாடிகள் வரை நீடிக்கிறது. பொதுவாக கிரகண நேரத்தில் நாம் வீட்டிலேயே இறைவனை நினைத்து வழிபாடு செய்வது அவசியம். இறைவனின் திருநாமங்களை உச்சரிக்கலாம். இறைவனை மனதார வணங்கி ஆராதனை செய்து வந்தாலே
 

நாளை (ஜூன்21) சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டியவை,செய்யக் கூடாதவை என்னென்ன?ந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் நாளை காலை 10.16 மணி முதல் பகல்1.32 மணி வரை நீடிக்கிறது.

நாளை நடைபெற இருக்கும் இந்த சூரிய கிரகணம் முழு நெருப்பு வளையம் போன்று காணப்படும். மொத்த கிரகண நேரம் 3 மணி 14 நிமிடம் 24 விநாடிகள் வரை நீடிக்கிறது.
பொதுவாக கிரகண நேரத்தில் நாம் வீட்டிலேயே இறைவனை நினைத்து வழிபாடு செய்வது அவசியம்.

இறைவனின் திருநாமங்களை உச்சரிக்கலாம். இறைவனை மனதார வணங்கி ஆராதனை செய்து வந்தாலே போதும். நம்மை சுற்றியிருக்கும் அனைத்தும் தீமைகளும் விலகி ஓடிவிடும் என்பது ஐதீகம்.

கிரகண காலத்தில் சமைத்த உணவுகள் மீதமிருந்தால் அதன் மீது தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். வீட்டில் கர்ப்பிணிப் பெண்கள் இருப்பின் அவர்களை வீட்டை விட்டு வெளியில் போகாமல் பார்த்துக் கொள்வது நலம். கிரகண நேரம் முடிந்ததும் வீடுகளை சுத்தம் செய்து, குளித்து விட்டு விளக்கேற்றி இறைவனை வணங்க வேண்டும்.

குளிக்கும் போது கல் உப்பு, மஞ்சள், சிறிது அருகம்புல் கலந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் நம் உடலிலிருந்து கெட்ட சக்திகள் வெளியேறும். கிரகண நேரத்தில் வீட்டை சுத்தம் செய்தல் கூடாது. கிரகண நேரம் முடிந்த பிறகே சுத்தம் செய்ய வேண்டும்.

A1TamilNews.com

From around the web