அபூர்வ சனி மஹா பிரதோஷம் 21-03-2020

இறைவனைத் தொழ எல்லா நாளும், எல்லா நேரமும் உகந்ததே என்றாலும் அவரவர் தோஷங்களுக்கும், வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ற நேரத்தில் வழிபாடு செய்திட வளமான வாழ்க்கையை பெறலாம் என்பது ஐதீகம். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எந்த தோஷமாக இருந்தாலும் சரி,எத்தனை தோஷங்கள் இருந்தாலும் சரி பிரதோஷ தினத்தில் சிவனை வழிபட்டு வர அனைத்து வித தோஷங்களும் அகலும் என்பது ஆன்மீக அன்பர்களின் வாக்கு வதன் மூலம் பயன்பெறலாம். பிரதோஷ தினத்தில் சிவனை மனிதர்களை மட்டுமல்ல
 

அபூர்வ சனி மஹா பிரதோஷம் 21-03-2020றைவனைத் தொழ எல்லா நாளும், எல்லா நேரமும் உகந்ததே என்றாலும் அவரவர் தோஷங்களுக்கும், வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ற நேரத்தில் வழிபாடு செய்திட வளமான வாழ்க்கையை பெறலாம் என்பது ஐதீகம்.

ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எந்த தோஷமாக இருந்தாலும் சரி,எத்தனை தோஷங்கள் இருந்தாலும் சரி பிரதோஷ தினத்தில் சிவனை வழிபட்டு வர அனைத்து வித தோஷங்களும் அகலும் என்பது ஆன்மீக அன்பர்களின் வாக்கு வதன் மூலம் பயன்பெறலாம்.

பிரதோஷ தினத்தில் சிவனை மனிதர்களை மட்டுமல்ல முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு என அனைவருமே வணங்குகின்றனர். அதே நேரத்தில் சிவனும் அனைத்து லோகங்களிலும் இருக்கும் உயிர்களின் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் .

அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் அதே நேரத்தில் நாமும் பிரார்த்தனை செய்திட ஈசன் நமக்கு அநேக நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவானே என சிவபுராணம் கூறுகிறது.

அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருக்கிறார். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

மார்ச் 21ம் தேதி சனிக்கிழமை வருகிற பிரதோஷம் சனி மஹாப் பிரதோஷம் . சனிக் கிழமை வரும் பிரதோஷம் மகத்துவம் நிறைந்தது. நமது ஜாதகத்தில் எந்த திசை நடந்தாலும் சனி மஹா பிரதோஷத்தில் கோயிலுக்குச் சென்று சிவனாரை வழிபாடு செய்தல் மகா புண்ணியம்.

அதிலும் ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம். பஞ்சமா பாவத்தையும் போக்கும் சனிப் பிரதோசத்தில் சிவ வழிபாடு செய்வோம். பரிபூரண பெரு வாழ்வு வாழ்வோம்.

http://www.A1TamilNews.com

From around the web