கணவன்மார்களே.. கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்..

வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஃப்ரீ டைமில் வாசிக்கவோ சினிமா பார்க்கவோ பெண்களால் முடிகிறதா ? காலையில் இருந்து ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறாள். சிறிது நேரம் அவளுக்கான நேரத்தையும் அனுபவித்துக் கொள்ளட்டுமே என்று நினைக்கும் கணவன்மார்கள் வெகு சிலரே. இன்றும் பல குடும்பங்களில் பெண்கள் புத்தகத்தை எடுத்து வாசிக்க உட்கார்ந்தால் அவளுக்கு குடும்பத்தினர் மீது அக்கறை இல்லை என்ற வசைச்சொற்கள் விழுந்த வண்ணம்தான் உள்ளது. இத்தனைக்கும் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்திருப்பாள். இந்த லட்சணத்தில்
 

கணவன்மார்களே.. கொஞ்சம் கவனிங்க ப்ளீஸ்..

வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஃப்ரீ டைமில் வாசிக்கவோ சினிமா பார்க்கவோ பெண்களால் முடிகிறதா ?

காலையில் இருந்து ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறாள். சிறிது நேரம் அவளுக்கான நேரத்தையும் அனுபவித்துக் கொள்ளட்டுமே என்று நினைக்கும் கணவன்மார்கள் வெகு சிலரே.

இன்றும் பல குடும்பங்களில் பெண்கள் புத்தகத்தை எடுத்து வாசிக்க உட்கார்ந்தால் அவளுக்கு குடும்பத்தினர் மீது அக்கறை இல்லை என்ற வசைச்சொற்கள் விழுந்த வண்ணம்தான் உள்ளது.

இத்தனைக்கும் வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்திருப்பாள். இந்த லட்சணத்தில் சினிமா பார்த்தாலோ அல்லது செல்ஃபோனை கையில் வைத்திருந்தாலோ அவ்வளவுதான்!

தன் மனைவி தன்னை இக்னோர் செய்தது போலவும், அந்த குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி வைத்திருப்பதுபோலவும் மனைவியின் மீது கோபம் கொள்ளும் கணவன்மார்கள்தான் அதிகம்.

கணவன், குழந்தைகள், வீட்டு வேலைகள், இதைத் தாண்டி பெண்களுக்கு எவ்வித சிந்தனையும் இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஆன்மாக்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறது!

– சசிகலா

https://www.A1TamilNews.com

From around the web