பிரணாப் முகர்ஜியின்  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது! மருத்துவமனை நிர்வாகம்!

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அங்கு அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு கழிவறையில் வழுக்கி விழுந்ததால் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த போதிலும், அவரது உடல்நிலை எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை
 

பிரணாப் முகர்ஜியின்  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது! மருத்துவமனை நிர்வாகம்!முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அங்கு அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு  கழிவறையில் வழுக்கி விழுந்ததால் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக  டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை  நடத்தப்பட்டது.  அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த போதிலும், அவரது உடல்நிலை எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web