காஷ்மீர்  ஷா பைசல் அரசியலை விட்டு தப்பித்து ஓட்டம்!! 

அரசியல் ஒரு சாக்கடை இறங்கி சுத்தம் செய்வேன் என சபதம் போட்டு வந்து நாளடைவில் இருந்த அடையாளத்தையும் இழந்து மாயமான அறிஞர்கள், நிபுணர்கள், நடிகர்கள் பலர். அப்துல்கலாம் பெயரில் இலட்சிய இந்தியா கட்சி தொடங்கினார் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ். சமூக சமத்துவ கட்சி நடத்தினார் ஐஏஎஸ் சிவகாமி. 2016 ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த 3 வது, 4வது, 5 வது அரசியல் அணிகள் மாயமாக மறைந்தன. தீவிரவாதம் பிரிவினைவாதம்
 
காஷ்மீர்  ஷா பைசல் அரசியலை விட்டு தப்பித்து ஓட்டம்!! அரசியல் ஒரு சாக்கடை இறங்கி சுத்தம் செய்வேன்  என  சபதம் போட்டு வந்து நாளடைவில் இருந்த அடையாளத்தையும் இழந்து மாயமான அறிஞர்கள், நிபுணர்கள், நடிகர்கள் பலர். 
 
அப்துல்கலாம் பெயரில்  இலட்சிய இந்தியா கட்சி தொடங்கினார்  கலாமின் அறிவியல் ஆலோசகர்  பொன்ராஜ். சமூக சமத்துவ கட்சி நடத்தினார் ஐஏஎஸ் சிவகாமி.  2016 ம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த 3 வது, 4வது, 5 வது அரசியல் அணிகள் மாயமாக மறைந்தன.
 
தீவிரவாதம் பிரிவினைவாதம் தலைவிரித்தாடிய ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த  ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ஷா பைசல்  2019  ஜனவரியில் பதவியை ராஜினாமா செய்தார். ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தார். அதன் விளைவாக சிறையில் அடைக்கப்பட்டார்.  ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ஷா பைசல் கட்சிப் பதவியிலிருந்து விலகினார். தேசவிரோதி என முத்திரை குத்தப்பட்டதால் மனம் நொந்துபோனேன்,  கட்சி செயல்படுமுன் என் அரசியல் முடிந்துவிட்டது.  வாழ்க்கையில் முன்னேறவேண்டும் உருப்படியாக ஏதாவது சாதிக்கவேண்டும்  என விரும்பினேன். ஆனால் பாடம் கற்றுக்கொண்டேன். என்னுடைய சில கருத்துக்கள் பிரச்னை உண்டாக்கி விட்டன. இனி அப்படி நடக்காது.
 
நான் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றபோது  காஷ்மீரை சேர்ந்த இளைஞர்கள் பலரிடம் ஐ.ஏ.எஸ் கனவு ஏற்பட்டது. அனால் நான் பதவி விலகி அரசியலில் ஈடுபட்டதால் அந்த இளைஞர்களின் கனவு சிதைந்து விட்டதாக கருதுகிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஷா பைசல் அறிவித்துள்ளார். கட்சி பற்றிய குறிப்புகளை அவரது ட்விட்டர் பக்கங்களில் இருந்து நீக்கி விட்டார். 
 
தற்கால அரசியலில் தாக்குப்பிடிக்க நிறையநிதி, சூழ்ச்சி, அராஜகம், அடியாட்கள், சந்தர்ப்பவாதம் , வெட்கமின்மை, ஏச்சுக்களை புறம்தள்ளுதல் என பலவற்றையும் தெரிந்து இருக்கவேண்டும். அரசியலில் காமராஜர், ராஜாஜி, ஓமந்தூரார், மொரார்ஜி தேசாய், வி.பி,சிங் , ராமகிருஷ்ணா ஹெக்டே  போன்றோர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை.
 
கலெக்டர் உத்தியோகம் போல அரசியல் கட்சித் தலைவர் பதவியில் வேலை செய்ய முடியாது, சகாயம், இறையன்பு போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிகாரம் இல்லாத பதவிகளுக்கு தள்ளப்படுவர். விலைமாது ஒருவரை பிடித்து  வர புறப்பட்ட ஏட்டு வடிவேலு , போலீஸ் சீருடையை பறிகொடுத்து  பிறந்த குழந்தை போல வெளியேறும் காட்சி நினைவுக்கு வருகிறது.
 
அரசியலை சுத்தப்படுத்த குதிக்கும் ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் அதிகாரிகள் கதி அப்படிதான் இருக்கும். ஜாதி, மதம், பணம்  சாராயம் விளையாடும் அரசியலை சுத்தப்படுத்துவது ரொம்ப சிரமம் தான். விஜயகாந்த் பிடிவாதக்காரர், உடல் ஆரோக்கியமாக இருந்தால் ஒருகை பார்த்து விடுவார். ரஜினிகாந்த் புலிவருது என சொல்லிக் கொண்டே இருக்கிறார். எப்போது வருமோ தெரியாது.
 
– வி.எச்.கே. ஹரிஹரன்
 

From around the web