வரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்! மத்திய நிதி அமைச்சகம்!

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் நேர்மையான முறையில் வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் பொருட்டு ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்காக ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம்
 

வரி செலுத்துபவர்களை கவுரவிக்க புதிய திட்டம் இன்று மோடியால் தொடக்கம்! மத்திய நிதி அமைச்சகம்!ந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.

இந்தியாவில் நேர்மையான முறையில் வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் பொருட்டு ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்காக ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் படி நேரடியாக வரி செலுத்துபவர்களை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளையும், சலுகைகளையும் வழங்கும். வருமான வரித்துறை செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும்.

மேலும் வரி செலுத்தாதவர்களை கண்காணிக்கவும், நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கவும் ‘விவாத் சே விஸ்வாஸ்’ என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

A1TamilNews.com

From around the web