ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு!டிஜிபி திரிபாதி!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்புமுறைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. தொடர் ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவது வழக்கம். மாநில தலைநகரங்களில்
 

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி 4அடுக்கு பாதுகாப்பு!டிஜிபி திரிபாதி!ந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்புமுறைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. தொடர் ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவது வழக்கம்.

மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றி விழாவை நடத்துவர். நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அவற்றை கடைப்பிடிக்க மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. விமானநிலையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சுதந்திர தின விழாவையொட்டி சென்னையில் மட்டும் 15000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் ரோந்துப்பணிகளும், வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விழா நடைபெறும் கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பும், டிரோன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web